ஆவாரம் இலை பயன்கள் – Avaram Leaf Benefits

Avaram Leaf Benefits In Tamil

இந்த பதிவில் மனிதர்களுக்கு மருந்தாகவும் பயிர்களுக்கு உரமாகவும் பயன்படும் “ஆவாரம் இலை பயன்கள்” பற்றி காணலாம்.

ஆவாரை இயற்கையில் வளர்ந்து நமக்கு பலவிதங்களில் பயன் தருகிறது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பாக வளர்கின்றது. சாலை ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும் இயற்கையாக ஆவாரை வளர்ந்திருக்கும்.

அழகிய மஞ்சள் வண்ணத்தில் கொத்துக் கொத்தான மலர்களைத் தாங்கி நிற்கும் ஒரு செடியே ஆவாரை ஆகும். மெல்லிய, தட்டையான காய்களை உடையது.

ஆவாரை செடி வகையைச் சார்ந்தது. புதர்செடி அமைப்பிலும் வளரும். மூன்று அடிகள் வரை வளரும் ஒரு குத்துச் செடியாகும்.

ஆவாரையின் தாவரவியல் பெயர் Cassia Aariculata என்பதாகும். இதை ஆங்கிலத்தில் Tanners Cassia என்று அழைப்பர். வடமொழியில் ‘தெலபோதகம்’ என்றும், தெலுங்கில் ‘தங்கேடு’ என்றும் குறிப்பிடுவர்.

ஆவாரையின் அனைத்து பகுதிகளும் மனிதருக்கு மருந்தாக மட்டுமின்றி பயிர்களுக்கும் சிறந்த உரமாகவும் விளங்குகின்றது.

ஆவாரம் இலை பயன்கள் (Avaram Leaf Benefits In Tamil)

1.ஆவாரை இலை குளிர்ந்த தன்மையுடையது என்பதால், கோடை வெயிலில் பயணம் செய்பவர்கள் ஆவாரம் இலைக் கொத்துக்களை தலை மீது பரப்பி நிழல் தரும்படி வைத்துச் செல்வர். இதனால் வெப்ப சலனத்தால் வரும் மயக்கம், வலிப்பு போன்றவை நீங்கும்.

2. வாதத்தைப் போக்கும். ஆவாரம் இலையை இடித்து தலை முதல் கால் வரையில் உடம்பில் ஊறும்படி ஓரிரு மணி நேரம் பூசி வைக்க வாதம் என்னும் வாயுத் துன்பம் போகும்.

3. இரவுக் கால பூச்சிகள், கொசுக்கள் போன்றவற்றை விரட்டும். இதற்கு ஆவாரம் இலையைக் காய வைத்து அன்றாடம் மாலை வேளையில் வீட்டில் புகை மூட்ட வேண்டும்.

4. நீரிழிவை கட்டுப்படுத்தும். இன்று, நீரிழிவு மருத்துவத்தில் பயன்படும் பல காப்புரிமை செய்யப்பட்ட இந்திய மருந்துகள் ஆவாரையிலிருந்து செய்யப்படுகின்றன.

5. ஆவாரை இரத்தத்தில் யூரியாவின் அளவைக் குறைக்கும்.

6. ஆவாரம் சக்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதமாகும். சர்க்கரை நோயால் ஏற்படும் குழிப்புண்களை மறையச் செய்யும். ஆவாரம் இலையை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் விழுதுனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான துணியில் வைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் கட்டிவர நல்ல பலன் கிடைக்கும்.

7. உடல்மெலிவு, பலக்குறைவு ஆகியவற்றை நீக்கி உடலைப் பலம் பெறச் செய்யும். ஆவாரையின் வேர், இலை, பட்டை, பூ, காய் இவற்றைச் சம எடையாகச் சேகரித்து, காயவைத்து, இடித்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு, 10 கிராம் வீதம், காலை, மதியம், மாலை வேளைகளில் வெந்நீருடன் 90 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

8. கண் நோய்களைக் குணப்படுத்தும். ஆவாரை இலையை நெய்யில் விட்டு வதக்கி ஆறவிட்டு, கண்களை மூடியபடி இமைகளின் மீது பத்து நிமிடங்கள் போட்டு வைக்க கண் நோய்கள் குணமாகும். கண்களில் அழுக்கு வெளிப்பட்டு புளிச்சவாடை வருதல், கண்சிவப்பு, கண் எரிச்சல் ஆகியனவும் குணமாகும்.

9. ஆவாரை இலை, பூ, பட்டை காய், வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து காய வைத்து பொடித்து வைத்துக் கொண்டு அரை தேக்கரண்டி அளவு தினம் 3 வேளை உள்ளுக்கு சாப்பிடால் சோர்வு, மந்தநிலை மறைந்து சுறுசுறுப்பும் வீரியமும் உண்டாகும்.

You May Also Like :
தூதுவளை பயன்கள்
கண்டங்கத்திரி பயன்கள்