ஆடி மாதம் சிறப்புகள்

aadi matham sirappu

ஆண்டின் ஒவ்வொரு மாதங்களும் ஏதோ ஒரு சிறப்புக்களை கொண்டே அமைந்துள்ளன. எல்லா மாதங்களும் இறைவனுக்கு விசேஷமான மாதங்கள் தான். அவற்றுள்ளும் சில மாதங்கள் அதி விஷேட மாதங்களாக உள்ளன.

அவற்றுள் ஆடி மாதம் பல்வேறுபட்ட சிறப்பம்சங்களை கொண்டு உள்ளது. ஆடி மாதத்தின் சிறப்புகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆடி மாதத்தின் சிறப்புகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

ஆடி மாதம் சிறப்புகள்

#1. அம்பாளுக்கு உகந்த மாதம்

அம்பாள் தவம் செய்த மாதம் என்பதால் ஆடி மாத செவ்வாய், வெள்ளி கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், ஞாயிற்று கிழமைகளில் கூழ் ஊற்றப்படும் நிகழ்வும் நடத்தப்படுகின்றன. இதனால்தான் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து படையல் செய்து வரப்படுகின்றது.

#2. கிருத்திகை நட்சத்திரம்

மாதம் முழுவதும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானதாகும். ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. இது முருகனுக்கு உகந்த தினம். முருகனை இந்த நாளில் வழிபாடு செய்வது நல்லது.

#3. ஆடி அமாவாசை

ஒவ்வொரு வருடமும் 3 முக்கியமான அமாவாசை வரும். அதில் முதலாவதாக ஆடி அமாவாசை வருகின்றது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாளாக விளங்குகின்றது. முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசீர்வாதம் பெற்றிடலாம். அன்னதானம் செய்தல் இந்நாளில் முக்கியத்துவம் வாய்ந்த செயல்களாகும்.

#4. புண்ணிய காலம்

மாதங்கள் உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவைக் கொண்டுள்ளன. இதில் தஷ்ணாயணம் புண்ணிய காலம் ஆகும். இது ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாக உள்ளது.

#5. சக்தி மாதம்

ஆடி மாதத்தை சக்தி மாதம் என்று பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. ஜீவ ஆதார சக்தி அதிகமாக உள்ள முக்கிய மாதமாகவும் உள்ளது. இதனால், ஆடி மாதம் சக்தி நிறைந்த மாதமாகக் கருதப்படுகிறது.

#6. விவசாயத்துக்கு உகந்த மாதம்

நம் முன்னோர்கள் ஆடி மாதத்தில் விதை விதைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். “ஆடிப் பட்டம் தேடி விதை” என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். இம்மாதத்தில் பருவ மழை தொடங்குவதால், விவசாயம் செய்ய உகந்த நாளாக உள்ளது.

#7. பெண்களது வழிபாட்டுக்கு உகந்த மாதம்

ஆடிப்பெருக்கு தினத்தில் நதியோரம் உள்ள கோயில்களில் கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். இதேபோல் சுமங்கலிப் பெண்கள் வழிபாடு நடத்தினால் அவர்களின் துணைவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். ஆடி மாதச் செவ்வாய் கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.

#8. கருட பஞ்சமி

கருடாழ்வார் ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆவார். அவரது பிறந்த தினம், “கருட பஞ்சமி” என்ற பெயரில் விரதமிருந்து கொண்டாடப்படுகிறது.

#9. வியாச பூஜை

ஆடி மாதத்தில் வியாச பூஜை நடத்தபடுகின்றது. வியாசர் குருக்களுக்கு எல்லாம் குருக்களாக போற்றப்படுகின்றார். எனவே இம்மாதத்தில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி அன்று மாணவர்கள் வியாசரை வணங்கினால் கல்வி வளம் அதிகரிக்கும்.

#10. துளசி வழிபாடு

ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

You May Also Like :
விருச்சிகம் ராசி குணங்கள்
தனுசு ராசி குணங்கள்