வாழை அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத் தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் முதலில் தோன்றியது. ஆனால் இன்று அனைத்து வெப்ப வலய பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது.
பழவகைத் தவரங்களில் வாழை மரம் ஒரு விதைத் தாவரம் என்ற சிறப்பைப் பெறுகின்றது.
வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி, கிழக்கு என்று எதுவும் வீணாகாது. வாழை மரத்தின் பயன்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.
வாழை மரத்தின் பயன்கள்
இறை வழிபாட்டில் பயன்படுகின்றது.
வாழை இலைகளும், பழங்களும் இறை வழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. பூசை, படையலிலும் வாழைப்பழம் இன்றி செய்யப்படும் சடங்கு முழுமை பெறுவதில்லை.
உணவு உண்பதற்கு வாழை இலை பயன்படுத்தப்பட்டுகின்றது.
விருந்தாளிகளுக்கு வாழை இலையில், குறிப்பாக தலை வாழை இலையில் (நுனி இலை) உணவு படைப்பது சிறந்த தமிழ் பண்பாடு ஆகும்.
சுப நிகழ்வுகளுக்கு வாழை மரம் மற்றும் வாழை மரத்தின் பழங்கள் உதவுகின்றன.
தமிழர்களின் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் கட்டாயம் குலைகளுடன் கூடிய வாழை மரங்களை வாசலில் தோரணமாகக் கட்டுவர்.
உணவாகப் பயன்படுகின்றது.
வாழைப்பூ, வாழைப்பழம் முதலானவை உணவாகவும் உட்கொள்ளப்படுகின்றன. வாழைப்பூவை வறுத்து உண்ணலாம், வாழைக்காயை மசித்து சிறிதளவு உப்பு சேர்த்து சிறிதளவு வேகவைத்து சூப்பாக அருந்தலாம்.
மருத்துவத் தேவைக்காக உபயோகிக்கப்படுகிறது.
உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழையிலை பச்சையம் நிறைந்தது. இதனால் வாழை இலையில் உணவை வைத்து உண்ணுமாறு சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது.
விஷ முறிவாக பயன்படுகிறது.
பாம்பு கடித்து விட்டது என்று தெரிந்தவுடன் வாழை மட்டை சாற்றில் அரை டம்ளர் அளவும், தும்பை இலைச் சாற்றில் அரை டம்ளர் அளவும் எடுத்து ஒன்றாகக் கலந்து கொடுத்து பாம்பு விஷத்தை தடுக்க பயன்படுத்துகின்றனர்.
உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன.
வாழைக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாகம் ஆகியவை உள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதசத்து, நார்ச்சத்து போன்றவையும் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான ஊட்ச்சத்தினைத் தருகின்றது.
பூமாலை கட்டுவதற்கு பயன்படுகின்றது.
நார் பூக்களையும், பூ மாலைகளையும் கட்டுவதற்கு பயன்படும் கயிறாகவும் பயன்படுகின்றது.
பெண்களுக்கு வாழை தண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.
மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது. உடலைக் குளிர்ச்சியடைய வைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும்.