மின்சார சிக்கனம் கட்டுரை

Minsara Pathukappu Katturai In Tamil

இந்த பதிவில் “மின்சார சிக்கனம் கட்டுரை” பதிவை காணலாம்.

தினமும் நம் செலவுகளை குறைத்து சிக்கனமாக செலவு செய்து பணத்தை சேமிப்பது போல மின்சார பாவனையையும் சிக்கனமாக பயன்படுத்தி சேமிக்க வேண்டும்.

மின்சார சிக்கனம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மின்சாரத்தின் அவசியம்
  3. மின்சார விரயமாதல்
  4. மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள்
  5. முடிவுரை

முன்னுரை

இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் மின்சாரம் என்பது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. அனைவரது வீடுகளிலும் இன்று மின்சார இணைப்பு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது.

மின்சாரம் இல்லாவிட்டால் இந்த உலகமானது இருளில் மூழ்கிவிடும். மற்றும் எமது அன்றாட காரியங்களை கூட செய்ய முடியாத நிலையானது ஏற்படும். ஏன் என்றால் மின்சாரம் அந்தளவிற்கு எம் அனைவருக்கும் அவசியமான ஒன்றாக உள்ளது. இக்கட்டுரையில் மின்பாவனையின் சிக்கனம் பற்றி காணலாம்.

மின்சாரத்தின் அவசியம்

வீட்டிலே நாம் இன்று பல உபகரணங்களை பாவிக்கின்றோம். அவை அனைத்தையும் இயக்குவது மின்சாரம் தான்.

வெளிச்சம் தருகின்ற மின்குமிழ்கள், பார்த்து ரசிக்கின்ற தொலைக்காட்சி, மின்விசிறிகள், குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், மின் அழுத்திகள், நீர் இறைக்கும் பம்பிகள், மின்சார அடுப்புகள் நாம் பாவிக்கின்ற தொலைபேசிகள், கணணிகள் என பலவகையான இலத்திரனியல் சாதனங்கள் இயங்க நாள் முழுவதும் எமக்கு மின்சாரமானது தேவையானதாக உள்ளது.

மின்சார விரயமாதல்

இவ்வாறு தினம் தினம் நாம் எமது தேவைகளை இலகுவாக நிறைவேற்ற இந்த மின்சாரத்தின் மூலம் இயங்குகின்ற சாதனங்களால் தான் இயலும் அனேகமாக நாம் மின்சாதனங்களை பாவிக்கின்ற போது அக்கறை இன்றி செயற்படுவதனால் மின்சாரம் அதிகளவில் விரயமாக்கப்படுகின்றது.

ஆளிகளை பாவனையின் பின் நிறுத்தாமல் விடுதல், தேவையற்ற மின் பாவனைகளாலும் அதிகளிவில் மின்சாரமானது விரையமாக்கப்படுகின்றது.

பலகோடி மக்களுக்காக அதிகளவான செலவில் அரசாங்கமானது மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிக நிதியை செலவு செய்கின்றது.

மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள்

மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இன்று உலகம் உள்ளது.

மின்சார பாவனைக்கு பின்னர் ஆளிகளை சரியாக மூடுதல், அதிகம் மின்சாரத்தை பயன்படுத்தும் கருவிகளை தவிர்த்து கொள்ளவதன் மூலமாகவும் வினைத்திறனாக மின்சாரத்தை சேமித்து கொள்ள முடியும்.

மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிகளவான சக்திவளங்கள் விரயமாவதனால் மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்க வேண்டும்.

முடிவுரை

இன்றைய காலகட்டத்தில் மின்சார உற்பத்திக்கான அதிகளவு எரிபொருட்கள் தகனமடைய செய்வதனால் அதிக சூழல் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் உருவாக துவங்கியுள்ளமையால் அபிவிருத்தி அடைந்த நாடுகள் சூரிய படல்கள் மூலம் மின்சாரங்களை உருவாக்கும் நகரங்களை அதிகம் உருவாக்கி வருகின்றமை சிறப்பானதாகும். இவ்வாறு பல வழிமுறைகள் மூலம் நாம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முடியும்.

You May Also Like:

சிக்கனமும் சிறுசேமிப்பும் கட்டுரை

இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு

சிறுதுளி பெருவெள்ளம் கட்டுரை