தென்னை மரம் 30 மீட்டர் வரை வளரக் கூடியது. உலகெங்கிலும் உள்ள தாழ்நில மண்டல பிரதேசங்களில் செழிப்பாக வளர்கின்றது. உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் தென்னை மரம் வளர்க்கப்படுகின்றது.
இந்தியாவில் தென்பகுதியில் மிக அதிகமாகத் தென்னை மரத்தைக் காணலாம். லட்சத்தீவுகள், அந்தமான் தீவுகள், ஒரிசாவிலும் தேங்காய் மரத்தை அதிக அளவு காணலாம்.
இதனை பூலோகத்தின் “கற்பக விருட்சம்” என்று கூறுவர். ஏனெனில் தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. தென்னை மரத்தின் பயன்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.
தென்னை மரத்தின் பயன்கள்
தென்னையிலிருந்து இளநீர் கிடைக்கிறது.
தென்னையில் இருந்து கிடைக்கும் இளநீர் ஜீரணமண்டலத்தை வலுப்படுத்த உதவும். நா வறட்சியை போக்கி தாகத்தை தணிக்கிறது. தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், அதில் இருக்கும் லாரிக் அமிலம், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைவு பிரச்சினையிலிருந்து விடுபடுதல் போன்ற பலன்கள் கிடைக்கும்.
கயிறு தயாரிக்கப் பயன்படுகிறது.
பொச்சு மட்டையிலிருந்து பெறப்படும் தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது. அதாவது சுருளி எனப்படும் நாரானது கயறு திரிக்க பயன்படுகின்றது.
தாவரங்களுக்கு உரமாக பயன்படுகின்றது.
தேங்காய் மட்டையை தாவரங்களுக்கு இயற்கை உரமாகவும், தாவர வேர்கள் பற்றிப் பிடிப்பதற்கும் தென்னை மட்டை பயன்படுகின்றது. மாடித் தோட்டங்கள் வைத்திருப்பவர்கள் தென்னம் தும்பையும், மண்ணையும் சேர்த்து சாடியில் பயிர்களை வளர்க்கலாம். பயிர்கள் நன்றாக வளர்வதுடன், பாரமும் குறைவாக இருக்கும்.
அகப்பை செய்வதற்கு உபயோகமாகிறது.
தேங்காய் மட்டையை உரித்த பின் கிடைக்கின்ற கடினமான ஓடு போன்ற பகுதி சிரட்டை அல்லது கொட்டாங்குச்சி எனப்படும். இதிலிருந்து அகப்பை செய்து சோறு, கறிகள் எடுப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகின்றது.
தென்னை மரத்திலிருந்து தேங்காய் எண்ணெய் கிடைக்கின்றது.
தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் தேங்காயை உடைத்து அதனை காய வைத்து செக்கில் அரைத்து எடுத்தால் தேங்காய் எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெய்யானது தலைமுடி ஆரோக்கியத்திற்கு மருத்துவ பொருளாகவும் சமையல் பொருளாகவும் பல பயன்பாடுகளுக்கு உதவுகின்றன.
கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
தென்னை ஓலை குடிசை வீடுகளின் கூரைகளை வேய்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது. வேலிகள் செய்வதற்கும் பயன்படுகின்றது. தென்னை மரத்தின் நீண்ட தண்டுப் பகுதியானது கட்டுமானம் பொருளாகப் பயன்படுகின்றது
உடலுக்குத் தேவையான சத்துக்கள் வழங்குகின்றது.
தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ், தாமிரம், செலினியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும், மெக்னீசியம் ஆகிய அனைத்து சத்துக்களும் தேங்காயில் உள்ளன.
தேங்காய் பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டும் சக்தி இருக்கிறது. தேங்காய் பூவை சாப்பிடுவது நல்லது. உடலிலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தப்படும்.
சமையலுக்கு பயன்படுகிறது.
தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. தேங்காய் பாலானது சமையலுக்கு அதிகமாக பயன்படுகின்றது.
கைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றன.
தென்னை மரத்தின் கொட்டா காட்சியை பயன்படுத்தி கைவினைப் பொருட்கள் செய்யலாம். உண்டியல்கள், ஆபரணங்கள் முதலானவை தயாரிக்கப்படுகின்றன.
பூஜைகள் நிகழ்வுகளுக்குப் பயன்படுகின்றது.
இளம் ஓலைகளை அழகாகப் பின்னி திருவிழா காலங்களிலும், திருமண வைபவங்களிலும் தோரணமாக அலங்காரம் செய்ய பயன்படுகின்றது. தேங்காய் பூஜைகளுக்குப் பயன்படுகின்றது. தென்னையின் பூக்களை திருவிழா நேரத்தில் மாவிளக்கின் மேல் வைக்க பயன்படுத்துவர்.
You May Also Like : |
---|
வாழை மரத்தின் பயன்கள் |
அருகம்புல் பயன்கள் |