தமிழில் காணமப்படும் ஓராயிரம் சொற்களில் தாமதமும் ஒன்றாகும். தாமதம் என்பது ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்து விட்ட நிலை ஆகும்.
சிலர் குறிப்பிட்ட நேரத்திற்கு செய்ய வேண்டிய வேலையை அந்நேரத்தில் செய்யாமல் நேரம் தாழ்த்தி செய்வதே தாமதம் எனப்படும்.
தாமதம் என்பது ஒருவரின் இயலாமையின் காரணமாக ஏற்படலாம். மற்றும் அவரின் சூழ்நிலை காரணமாக ஏற்படலாம். ஆனால் செய்ய வேண்டிய காரியத்தை கால தாமதம் இன்றி செய்து முடிப்பது சிறப்பானதாகும்.
இவ்வாறான தாமதம் என்ற சொல்லுக்கு தமிழில் வேறு பெயர்களும் காணப்படுகின்றன.
தாமதம் வேறு சொல்
- மந்தம்
- காலநீட்சி
- காலநீட்டம்
- காலக்கழிவு
- தள்ளி வைத்தல்
- ஒத்தி வைத்தல்
- நேரம் தாழ்த்தல்
தாமதம் என்ற சொல் பல இலக்கியங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. அதற்கான ஆதாரங்களாவன,
- ஒரு கண நேரங்கூட இதில் தாமதம் கூடாது” என்றாள் (பார்த்திபன் கனவு, கல்கி)
- என்ன இவ்வளவு தாமதம்? நேற்று ராத்திரியே ஏன் வரவில்லை? (அலை ஒசை, கல்கி)
- தொட்டதுதான் தாமதம் உடனே ஓர் அற்புதம் நிகழ்ந்தது (சிவகாமியின் சபதம், கல்கி)
- தாமதம் நீக்கிவிடு (பாரதிதாசன்)
இவ்வாறு தாமதம் என்பது இலக்கியங்களில் கூட பயன்பட்டிறுப்பதை இதன் மூலம் அறியலாம்.
இலக்கியங்களில் தாமதம் என்ற சொல்லை பயன்படுத்துவதன் மூலம் கதாபாத்திரங்களின் மன உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
தாமதம் என்பது ஒரு சொல்லாக மட்டும் அல்ல அது உணர்ச்சி வெளிப்பாடாகவும் காணப்படுகின்றது. எனவே இவற்றின் மூலம் தாமதம் என்ற சொல் பற்றி அறியலாம்.
Read more: கற்பூரவள்ளி இலையின் பயன்கள்