இன்றைய வாழ்க்கை முறையானது மிகவும் முன்னேற்றகரமானதாகவும் மாறுதல்களுக்கு உட்பட்டதாகவும் உள்ளது.
50 வருடங்களுக்கு முன்பு உள்ள குழந்தையின் அறிவிற்கும் இப்போதுள்ள குழந்தையின் அறிவிற்கும் பல வித்தியாசமுண்டு.
மூன்று வயதில் இருந்தே பல குழந்தைகள் பல்வேறு விதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு ஆயத்தமாகி விட்டனர்.
இத்தகைய வளர்ச்சி ஏற்படும்போது இயல்பாகவே கலாச்சாரத்திலும் மாற்றம் நிகழ்கின்றது. காலத்திற்கு ஏற்றால்போல் அவர்களது கலாச்சாரத்தை எல்லோரும் மாற்றி அமைத்து விடுகின்றனர்.
உதாரணமாக அன்றாட வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அதாவது திருமணம், சடங்கு, காதுகுத்து விழா போன்றவற்றில் எதுவாக இருந்தாலும் பழங்காலத்தை விட இப்போது நிறையவே வித்தியாசம் உண்டு. இந்த வித்தியாசம்தான் காதல் என்ற விடயத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
கடந்த 10 ஆண்டுகளில் “டேட்டிங்” என்ற விஷயம் பலவிதமான மாற்றங்களை அடைந்துள்ளது.
‘Tinder’, ‘Bumble’, ‘Match’ போன்ற டேட்டிங் செயலிகள் தொடர்ந்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன. பிளென்ட்டி ஆஃப் ஃபிஷ் (Plenty of Fish) என்ற சர்வதேச டேட்டிங் செயலி சர்வதேச ரீதியில் மிகவும் பிரபலமானது.
மனத்துக்கு பிடித்த ஒருவருடன் ஒரு மாலை நேரத்தையோ அல்லது இரவு உணவினையோ பகிர்ந்து கொண்டே அவர்கள் மனத்துக்குள் நுழையும் விருப்பத்தைத் தெரிவிப்பதுதான் இந்த டேட்டிங்கின் நோக்கம் ஆகும்.
டேட்டிங்கிற்கு முக்கியமான தேவை ரம்யமான சூழலுள்ள ஓர் இடம். அமைதியான அதே சமயம் அழகான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது பெரும்பாலும் ரெஸ்டாரண்டாக இருப்பது சிறந்தது.
டேட்டிங்கில் ஒருவரைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்வது முக்கியம் என்பதால் உரையாடுவார்கள். குறைவாகவும் அதே சமயம் ஒருவரைப் பற்றி மற்றவர் கூறும் புகழ் உரைகளும்தான் பெரும்பாலும் இருக்கும்.
சமூகம் கால காலமாக நிறுவி வைத்துள்ள சில அடிப்படை விதிகளின் மீறல்களாகவும், கலாச்சார அதிர்வினை ஏற்படுத்தும் ஒரு தீய செயலாகவும் டேட்டிங் பலராலும் கருதப்பட்டுவருகிறது.
டேட்டிங் என்றால் என்ன
காதல் மற்றும் உறவுடன் கூடிய பயன்பாட்டில் இச்சொல்லின் பொருளானது “பொருத்தம் பார்த்தல்” என்றே பயன்படும்.
அத்துடன் இந்த “dating” எனும் சொல், பொருத்தம் பார்த்தலுக்கான சந்திக்கும் திகதியை குறிப்பதால் “பொருத்தம் பார்த்தலுக்கான திகதியிடல்” என்றும் குறிப்பிடலாம்.
டேட்டிங் என்பது காதல் உணர்வு என்று சுருக்கமாக கூறலாம். இன்றைய காலத்தில் திருமணம் ஆவதற்கு முன்பு ஒரு டேட்டிங் வைத்து, அவர்கள் இருவருக்கும் இடையில் ஒத்துப் போகின்றதா? காதல் உறவு திருமணத்துக்கு பின்பும் நல்லதாக தொடருமா? என்று பார்த்து முடிவு எடுப்பர்.
டேட்டிங்கின் போது நிராகரிப்பு என்பது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
டேட்டிங் செய்வதற்கு அதிகபட்சம் 90 நிமிடங்கள் போதுமானது என்பதே நிபுணர்களின் கருத்து. ஒருவர் நமக்கு ஏற்றவரா? வாழ்க்கை துணையாக வருவதற்கு தகுதியானவரா என்பதை பேசி முடிவு செய்ய இந்த நிமிடங்களே போதுமானதாகும்.
டேட்டிங் செய்வதில் ஒருவருடைய உணர்ச்சிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அதனால், சரியான உள்நோக்கம் இருந்தால் மட்டுமே டேட்டிங் செய்யுங்கள்.
மேலும், டேட்டிங் என்பது திருமணத்திற்கு முன்பு இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு ஏற்ற வழியாகவும் பலர் கருதுகிறார்கள். எனவே அதை சரியான முறையில் பயன்படுத்துவது, தவறாக நினைப்பது அவரவர் மனதினைப் பொறுத்தது.
Read more: பயிர்ப்பு என்றால் என்ன