உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சி பயன்பாட்டில் இருந்தாலும் அது பல சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படலாம் என அஞ்சப்படுகின்றது. எனவே தான் மத்திய அரசு அதிகாரபூர்வமாக டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தனியார் டிஜிட்டல் நாணயங்களுக்குப் பதிலாக அரசே டிஜிட்டல் நாணயங்களை அறிமுகம் செய்வது பற்றி அரசுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரிசர்வ் வங்கி யோசனை தெரிவித்தது.
பணப்பரிவர்த்தனையை குறைத்து டிஜிட்டல் நாணயத்தை பரவலாக்கலாம் என்று பரிந்துரை செய்தது.
இந்நிலையில் முதல் கட்டமாக சோதனை முயற்சியின் அடிப்படையில் டிஜிட்டல் நாணயத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.
Bank of Baroda, Union Bank of India, State Bank of India, HDFC Bank, ICICI Bank, Kotak Mahindra Bank, Yes Bank of India, IDFC first bank ஆகியவை இத்திட்டத்திற்காக முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டவையாகும்.
முதலில் மொத்த வணிகத்துக்கு இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் ஒரு மாதத்திற்குள்ளாக சில்லறை விற்பனைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் பயனாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Table of Contents
டிஜிட்டல் நாணயம் என்றால் என்ன
இது அதிகாரபூர்வமாக வங்கியால் வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளின் டிஜிட்டல் வடிவம் என்று சொல்லலாம். அதாவது இந்த டிஜிட்டல் ரூபாய் என்பது பணத்தின் மின்னணு வடிவமாகும்.
டிஜிட்டல் நாணயம் நன்மைகள்
பணத்தை மத்திய வங்கி நிர்வாகம் செய்து வரும் நிலையில் டிஜிட்டல் பணத்தை நிர்வாகம் செய்ய டிஜிட்டல் நாணயத்திற்கான மத்திய வங்கி செயல்படும் என மத்திய வங்கி கூறியுள்ளது.
டிஜிட்டல் நாணயமானது கிரிப்டோக் நாணயங்கள் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட்களுக்குள்ள அத்தனை வசதிகளையும் கொடுக்கும்.
டிஜிட்டல் நாணயங்களை எரிக்கவோ, கிழிக்கவோ, சேதப்படுத்தவோ, அதை தொலைக்கவோ முடியாது. பணத்துடன் ஒப்பிடுகையில் டிஜிட்டல் நாணயத்தின் வாழ்நாள் வரையறுக்க முடியாது.
அதேபோல் டிஜிட்டல் நாணயங்கள் மத்திய அரசாலேயே செயற்படுத்தப்படுவதனால் பிட்காயின் போன்ற கிரிப்டோ நாணயங்களுக்குள்ள வெளிப்படைத்தன்மையின்மை மற்றும் பாதுகாப்புத் தன்மை குறைபாடுகள் இருக்காது.
அதேபோல் பிட்காயின் போன்ற கிரிப்டோ நாணயங்கள் முறைகேடுகள் தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பது வரிமுறைகேடு போன்றவற்றில் ஈடுபட அதிக சாதகமுள்ளது.
பிளாக் செயின் என்ற பரிவர்த்தனை பதிவு முறையில் டிஜிட்டல் நாணயங்கள் பயன்பாட்டில் வந்துள்ளது. பிளாக் செயின் என்பது டிஜிட்டல் நாணயத்தை யார் யாருடன் பரிவர்த்தனை செய்கின்றார்கள் என்று டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதாகும்.
இதனால் ரூபாய் நோட்டுகள் போன்று அச்சிடப்படும் செலவுகள் வருங்காலத்தில் படிப்படியாக குறையும் டிஜிட்டல் முறையில் இந்திய ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டால் ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்திற்கே கணிசமான சேமிப்பு கிடைக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றார்கள்.
இதனால் இளைய தலைமுறையினர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதனை விட்டுவிட்டு டிஜிட்டல் ரூபாய் பயன்பாட்டிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பரிவர்த்தனைக்கு டாலர், யூரோ உள்ளிட்டவற்றிற்குப் பதிலாக டிஜிட்டல் நாணயத்தைப் பயன்படுத்த முடியும் என்று கருதுகின்றனர்.
ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் டொலருக்குப் பதிலாக டிஜிட்டல் கரன்சியைப் பயன்படுத்தி தடைகளைத் தாண்ட முடியும் எனக் கருதுகின்றன.
Read more: வணிகம் என்றால் என்ன