சுத்தம் பேணி சுகமாய் வாழ்வோம் கட்டுரை

sutham katturai in tamil

இந்த பதிவில் “சுத்தம் பேணி சுகமாய் வாழ்வோம் கட்டுரை” பதிவை காணலாம்.

இந்த நலமான வாழ்வினை பெற்றுக்கொள்ள வேண்டுமாகையினால் சுத்தம் பேணுவதை நாம் நாடுதலே சால சிறந்த வழியாகும்.

சுத்தம் பேணி சுகமாய் வாழ்வோம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நலவாழ்வு எனப்படுவது
  3. தூய்மை பேணல்
  4. நலவாழ்வின் அடிப்படையவது சுத்தம்
  5. நோய்களற்ற வாழ்வு
  6. வழி வகைகள்
  7. முடிவுரை

முன்னுரை

இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொருவருடையதும் எதிர்பார்ப்பு நலமாக வாழ்வது தான். நாம் நலமாக மகிழ்வாக வாழ என்ன செய்ய வேண்டும்? என வினா எழுப்பினால் வாழ்வில் சுத்தத்தை கடைப்பிடித்தல் என்பது தான் பதிலாக இருக்கும்.

ஆகவே எமது வாழ்வில் நாம் சுத்தமாக இருந்தால் பல நன்மைகளை அடைந்து கொள்ளமுடியும். இந்த வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை எம்மால் உணர முடியும்.

நமது உடலையும் நம்மை சுற்றியுள்ள சூழலையும் நாம் தூய்மையாக வைத்திருப்பதனால் நல்ல மனநிறைவானது உருவாகும். இதனால் தான் “சுத்தம் சுகம் தரும்” என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.

இக்கட்டுரையில் சுத்தத்தின் அவசியமும் அதன் நன்மைகள் தொடர்பாகவும் விபரிக்கப்படுகிறது.

நலவாழ்வு எனப்படுவது

ஒரு மனிதனுடைய நலவாழ்வு எனப்படுவது உடல் மற்றும் உள ஆரோக்கியம் தொடர்பானது. அதாவது மனதளவிலும் உடலளவிலும் சிறந்த நிலையில் ஒரு மனிதன் வாழ்வதே நலவாழ்வு என வரையறை செய்யப்படுகிறது.

இது அனைவருக்கும் சாத்தியமானதன்று. எவரொருவர் தூய்மையான சூழலை தம்மை சுற்றி உருவாக்க முயல்கின்றனரோ அவர்களுக்கே நலவாழ்வு சாத்தியமாகும்.

மாறாக அசுத்தம் நிறைந்த சூழலில் வாழும் மனிதர்கள் மனஅழுத்தம் மற்று துர் சிந்தனைகளுக்குள் செல்லும் வாய்ப்பானது காணப்படுகிறது.

அதாவது நல்ல நிலத்தில் விழுகின்ற நெல் மணிகள் செழிப்பாக வளர்வதனை போலவே நல்ல வாழ்க்கையும் சுத்தமான சூழலில் அமைகிறது.

தூய்மை பேணல்

தூய்மை பேணல் எனப்படுவது மனிதர்களுக்கு அடிப்படையான ஒரு சிறப்பான பண்பாகும். வீட்டினை கூட்டுதல் கழுவுதல். கிருமி தொற்று அகற்றுதல் பொருட்களை துப்பரவாக வைத்தல் ஒழுங்கு முறையாக அடுக்கி வைத்தல்,

பாவிக்கின்ற பொருட்களை கவனத்துடனும் தூய்மையாகவும் பாவித்தல், குப்பைகளை உரிய முறையில் அகற்றுதல், சூழலை மேலும் பசுமையாக்கல், தனிமனித சுத்தம் இவை போன்றன அடிப்படையான துய்மையை பேணும் முறைகளாகும்.

இறைவன் இருக்கும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது போல எமது வாழ்விடங்களும் தூய்மையாக இருக்க வேண்டும். அப்போது தான் எமது வாழ்வு சிறப்பாகவிருக்கும்.

நலவாழ்வின் அடிப்படையாவது சுத்தம்

ஆரோக்கியமான மனிதர்களின் ஆரோக்கியத்தின் அடிப்படை ரகசியமே இந்த சுத்தம் பேணுதல் தான். இது வெளிப்படையான உண்மையாகும்.

தூய்மைப்படுத்தல் என்பது மனதை புத்துணர்வு அடைய செய்யக்கூடியதாகும். ஆனால் அழுக்கோ மேலும் எம்மை துன்பத்தில் ஆழ்த்தும்.

எம்மை சுற்றி ஏராளமான நோய்கிருமிகள் காணப்படுகின்றன இவை எம்மை இலகுவில் நோய்களுக்கு ஆளாக்கி விடும்.

ஆதலால் நாம் சுத்தமாக இருப்பதனால் இவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். எமது ஆரோக்கியம் எமது உள பலத்தை மேலும் வலிமையாக்கும்.

ஆகவே வாழ்வில் வெற்றி பெறவேண்டுமாயின் சுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

நோய்களற்ற வாழ்வு

கோடி கொடுத்தாலும் நோயற்ற வாழ்வு தரும் மகிழ்ச்சியை யாராலும் பெற்று விட முடியாது. ஏனென்னறால் நோய்வாய்ப்படுகின்ற நேரங்களில் நாம் படுகின்ற வேதனைகளும் துன்பமும் அவற்றினால் ஏற்படும் வேதனைகளும் மிக மோசமானவை.

நோய்களற்ற வாழ்வானது மனதளவில் தன்னம்பிக்கையை வலுப்படுத்துவதோடு மனநிம்மதியை அளிக்கவல்லது. நோய்களற்ற பயிரானது நல்ல அறுவடையினை தருவது போல நோயற்ற வாழ்க்கை நமக்கு வெற்றியை தரும்.

வழி வகைகள்

நோய்களில்லாமல் பல காலம் ஆரோக்கியமாக வாழவேண்டுமாயின் சுத்தமான உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். தூய்மையான நீர், தூய்மையான காற்று இவற்றை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

போதுமானளவு உறக்கம், சிறந்த உடற்பயிற்சிகளான யோகா, நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல், மன அழுத்தம் இல்லாத வேலைகள் போன்றனவும், போதும் என்ற மனப்பாங்கு இவை தான் ஒரு மனிதனை மனநிறைவுடன் வாழ செய்யும்.

முடிவுரை

எப்போதும் தூய்மையை நாம் பேணுகையில் அகத்தின் அழகு வெளிப்படும் என்று கூறுவார்கள். ஆகவே நாம் சுத்தத்தை மிகசரியாக கடைப்பிடிக்க வேண்டும் இதனை திருவள்ளுவர் கூறுகையில்

“நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்ப செயல்” என்கிறார். அதாவது நமக்கு ஏற்படுகின்ற இடர்பாடுகளை அவற்றின் வேரிலிருந்து களைவதனால் தான் நலன் பெற முடியும்.

இந்த நலமான வாழ்வினை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சுத்தம் பேணுவதை நாம் நாடுதலே சால சிறந்த வழியாகும்.

You May Also Like :

உடல் நலம் காப்போம் கட்டுரை

அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை