சைவ சமயத்தின் முழு முதல் கடவுளே சிவனாவார். அவன் இன்றி அணுவும் அசையாது என்பதற்கு இணங்க சிவன் இன்றி பூமியில் எதுவும் அசையாது என்பது சைவர்களின் நம்பிக்கை.
ஆரம்ப காலங்களில் சிவன் என்ற கடவுள் காணப்படவில்லை. அதாவது வேதகாலத்தில் சிவன் என்ற கடவுள் முக்கியம் பெற்றிருக்கவில்லை விஷ்ணு, இந்திரன், உருத்திரன் போன்ற தெய்வங்களே முக்கியம் பெற்றிருந்தனர்.
வேத காலத்தில் இருந்த உருத்திரனே பிற்காலத்தில் சிவனாக தோற்றம் பெற்றார் என்பது ஐதீகம். இவர் மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார். அனைத்து வல்லமையும் பொருந்தியவர் சிவனாவார்.
இவரே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் போன்ற ஐந்து தொழில்களை பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், சதாசிவன், மகேஸ்வரன் ஆகிய மூத்தங்களை கொண்டு மேற்கொள்கின்றார்.
இவரின் வல்லமையாகிய பராசக்தியை இடது பாகமாகக் கொண்டவர். இவரின் குணபியல்பு, தோற்றம், அவர் மேற்கொண்ட அவதாரங்கள், அவர் செய்யும் செயல்கள் என்பவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு சிவன் என்பவர் பல நாமங்களை பெறுகின்றார்.
கடவுளுக்கு பல நாமம் சொல்லும் முறையானது வேத காலத்திலேயே ஆரம்பமானது. அதாவது யசூர் வேதத்தில் உருத்தூரனுக்கு பல பெயர் கூறி வழிபடும் முறையானது பிற்காலத்தில் இறைவனுக்கு பல பெயர் கூறி வழிபடும் முறையை ஆரம்பித்து வைத்தது.
அவ்வகையிலேயே சைவ சமயத்தின் முழு முதற்கடவுளான சிவன் பல நாமம் கொண்டு அழைக்கப்படுகின்றார். அவருக்குரிய நாமங்கள் 1008க்கு மேலாக காணப்படுகின்றன. அவற்றில் சில நாமங்களை அறிந்து கொள்வோம்.
Table of Contents
சிவன் என்ற சொல்லின் பொருள்
சிவன் என்றால் தமிழில் சிவந்தன் என்று பொருள் சிவந்தன் என்று பொருள். வடமொழியின் சிவம் என்றால் முழுமையானது, மங்களமுடையது என்று பல பொருள் உண்டு.
சிவனின் வேறு பெயர்கள்
- அகோரன்
- அட்டமூர்த்தி
- அட்டன்
- அத்தன்
- அத்துவலிங்கம்
- அத்துவாசைவம்
- அதிகாரசிவன்
- அந்தகாரி
- அந்திவண்ணன்
- அநபாயன்
- அம்பலகூத்தன்
- அம்பலத்தாடி
- அம்பலவாணர்
- அம்மையன்
- அமூர்த்தி
- அயன்
- அர்த்தநாரி
- அரப்பிரியன்
- அரவணிந்தோன்
- அரவன்
- அரன்
- அரி
- அருந்தன்
- அரூபி
- அல்லமன்
- அழல்வண்ணன்
- அழற்கண்ணன்
- அழற்கரத்தோன்
- அழனிக்கடவுள்
- அறக்கொடிபாகன்
- அறுகட்பீடம்
- அனந்தன்
- அனலாடி
- அனலி
- அனாதி
- அனாதிசைவன்
- அஷ்டமூர்த்தி
- ஆசாம்பரன்
- ஆதிசக்தி
- ஆதிரை முதல்வனன்
- ஆயிரநாமன்
- ஆயிரம்பெயரோன்
- ஆரணவுருளன்
- ஆறுகுடி
- ஆனந்தன்
- ஆனன்
- இடபவாகனன்
- இடபாரூடர்
- இடைமருது
- இந்துசிகாமனி
- இராமலிங்கம்
- இலயன்
- இலயி
- இறையான்
- இறையோன்
- ஈச்சுரன்
- ஈசன்
- ஈசானன்
- உமாபதி
- உமாமகேசன்
- உமேன்
- உருத்திரன்
- எண்குணத்தான்
- எண்டோளன்
- எராயாடி
- என்பாபரணன்
- ஏகம்பர்
- ஏகன்
- ஏகாம்பரன்
- ஏற்றுவாகனன்
- ஏறன்
- ஏறூர்ந்தோன்
- கங்காதரன்
- கங்காலமாலி
- கங்காளன்
- கங்கைவேனியன்
- கட்டங்கன்
- கட்டுவாங்கன்
- கண்ணுதல்
- கண்ணுதலான்
- காபர்த்தி
- கபாலன்
- கயிலைநாதன்
- கலையுருவினோன்
- காபாலகனன்
- காமநாசன்
- கிராதகன்
- காமாரி
- காலகாலன்
- கிராதமூர்த்தி
- கிரிசன்
- கிரீசன்
- குன்றவில்லி
- கூத்தன்
- கூர்மான்டார்
- கூற்றுதைத்தான்
- கைலாசபதி
- கைலையாளி
- கொலைவன்
- கொன்றைசூடி
- கொன்றைவேந்தன்
- கோபதி
- கோபன்
- கோவணன்
- கோவன்
- சகளம்
- சங்கக்குழையான்
- சங்கார கர்த்தா
- சசிசேகரன்
- சசிதரன்
- சட்டைநாதன்
- சடாதரன்
- சடாதாரி
- சடாமகுடம்
- சடையப்பன்
- சடையன்
- சடையோன்
- சண்டன்
- சன்டிலன்
- சத்தன்
- சதிபதி
- சதுர்புயன்
- சம்மு
- சயம்பு
- சர்வர்
- சலதரன்
- சலதாரி
- சாம்பசிவம்
- சாம்பவமூர்த்தி
- சாம்பன்
- சாமகானன்
- சித்தன்
- சிரபாத்திரி
- சிவபிரான்
- சிவபெருமான்
- சிவா
- சிற்றம்பலம்
- சீமுதன்
- சுடர்விழியோன்
- சுடலையாடி
- சூலபாணி
- செஞ்சடையோன்
- செட்டியப்பன்
- சைவன்
- சொக்கன்
- சோமசேகரன்
- சௌந்தரன்
- சௌமியன்
- ஞானக்கூத்தன்
- ஞானமூர்த்தி
- தந்தியுரியோன்
- திகம்பரன்
- திரயம்
- திரிநேந்திரன்
- திரிபுராரி
- திரியம்பகன்
- திரிலோசனன்
- திருநீலகண்டன்
- தீமேனியான்
- தீயாடி
- தீவண்ணண்
- துங்கீசன்
- துரியசிவன்
- துருணன்
- நஞ்சுண்டான்
- நடராசமூர்த்தி
- நடராசன்
- நம்பன்
- நாதன்
- நித்தன்
- நிரஞ்சன்
- நிரத்திமாலி
- நிரந்தரன்
- நிரம்பரன்
- நின்னாமன்
- நீலகண்டன்
- நீள்சடையோன்
- பகவான்
- பகாலி
- பசுபதி
- பஞ்சாணன்
- பண்டரங்கள்
- பத்திரன்
- பர்க்கன்
- பரமசிவன்
- பரமேசுவரன்
- பரமேட்டி
- பவநாதன்
- பவன்
- பாசபாணி
- பிச்சன்
- பிஞ்ஞசகன்
- பிரம்மம்
- பிறைசூடன்
- பிறைசூடி
- புராரி
- புனர்வசு
- பூததாரன்
- பூதநாதன்
- பூபதி
- பூதவாளி
- பூழியான்
- பூளைசூடி
- பெண்பாகன்
- பொனீவிலி
- பௌதிகன்
- மகாதேவன்
- மகாநாடன்
- மகாலிங்கம்
- மகேசன்
- மகேசுவரன்
- மணிகண்டன்
- மத்துவன்
- மதிச்சடையன்
- மதிசூடி
- மிருடன்
- முக்கண்ணன்
- முத்தன்
- முப்புரம்எரித்தோன்
- வானம்
- விசுவேசன்
- விடைப்பாகன்
- விமலன்
- விலாசி
- வெகுரூபன்
- வெற்றியாளர்
- வைத்தியநாதன்
- வைரவன்
- ஹரிகரன்
இவ்வாறு பல நாமங்களைக் கொண்ட சிறப்புடையவரே சிவன் ஆவார்.
You May Also Like : |
---|
கடவுள் வேறு பெயர்கள் |
மனிதன் வேறு பெயர்கள் |