கலைச்சொற்கள் எப்போதும் காரணப்பெயராக இருக்கும். கலைச் சொற்களானவை அன்றாடம் பயன்படுத்தும் கருவிகள், வேளாண்மை சார்ந்த பிறநுட்பங்கள், மருத்துவம், பொறியியல், தகவல் தொடர்பு போன்ற துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கும் போது அவரவர் அவர்களது தாய் மொழியில் அதற்கான பெயரை வைப்பர்.
அவ்வாறு வைக்கும் போது அதற்கு பொருத்தமானதாகவும், எளிதாகவும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
தூய்மை, சீர்மை, பலதுறை அணுகுமுறை போன்ற அத்தனையையும் பொருந்தியதாகவே அப்பொருளுக்கு பெயர் சூட்ட வேண்டும்.
துறை சார்ந்த கலைச்சொற்கள் இலட்சக்கணக்கில் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்பட்ட கலைச்சொற்கள் அகராதியில் அகர வரிசைப்படுத்தி வைக்கப்படுகின்றன.
Table of Contents
கலைச்சொற்கள் என்றால் என்ன
ஒரு மொழியிலுள்ள ஒரு சொல்லுக்கு ஏற்ற சொற்செறிவும், கருத்தாழமும் மிக்க எளிமையான சொல்லைக் கலைச்சொற்கள் என அழைக்கின்றனர்.
தமிழ் கலைச்சொற்கள் உருவாக்கப்படுவதற்கான விதிகள்
- தமிழ் சொற்களாக இருக்க வேண்டும். அதாவது கண்டுபிடிக்கப்பட்ட சொல் அந்த மொழியிலிருந்து அப்படியே மொழி பெயர்த்ததாக இருக்கக் கூடாது.
- புதிதாக தமிழில் உருவாக்கப்பட்ட சொற்களாக இருக்க வேண்டும்.
- பொருள் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
- சிறிதாக, எளிமையானதாக இருக்க வேண்டும்.
- ஓசை நயம் இருக்க வேண்டும்.
- தமிழ் மரபுக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.
கலைச்சொற்களில் மாணவர்களின் பங்களிப்பு
புதிதாக உருவாக்கப்பட்ட கலைச்சொற்கள் ஏட்டளவில் மட்டுமே இருக்காது. ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டும் இருக்கும். ஆனால் மக்களின் பயன்பாட்டில் பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
இன்றைய மாணவர்கள்தான் எதிர்காலத்தின் இளைஞர்கள். அதனால் அவர்கள் அந்த கலைச் சொற்களை தம் வாழ்க்கையில் பயன்படுத்தினால் அது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் சொல்லாக நடைமுறை சொல்லாக பயன்படுத்தப்படும்.
எனவே மக்களின் பயன்பாட்டிற்கு கலைச்சொற்களை கொண்டு வருதல் மாணவர்களின் கடமையாக உள்ளது.
இதழ்கள் மூலமாகவும், மின் இதழ்கள் மூலமாகவும், மாத இதழ்கள் மூலமாகவும் கலைச்சொற்களுக்கு என தனிப் பகுதிகளை ஒதுக்கி வெளிவரும் போது, மாணவர்கள் கலைச்சொற்கள் பற்றிய அறிவினைப் பெற பெரும் வாய்ப்பாக இருக்கும்.
கலைச்சொற்களின் முக்கியத்துவம்
மொழி நிலைத்து நிற்பதற்கு கலைச்சொற்கள் இன்றியமையாதவையாகும். உலகில் மிகவும் தொன்மையான மொழிகளில் ஒன்றாக நமது தாய் மொழியாம் தமிழ்மொழி விளங்குகின்றது.
இம்மொழி பன்னெடுங்காலம் நிலைத்து நிற்க வேண்டுமெனில் பல்வேறு மொழிகளிலும், பல்வேறு உலக நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பொருட்களுக்கு புதிய சொல்லுக்கு நம் தாய்மொழியில் கலைச் சொற்களை கண்டுபிடித்திருப்பது அவசியம்.
இதன் மூலம் நமது மொழி மீண்டும் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டு பல்வேறு கலைச்சொற்களாக நிலைத்து நிற்கும்.
பல்வேறு துறைகளைத் தாய் மொழியாக பயிலும் போது மாணவர்களிடையே சிந்தனைத் திறன் அதிகமாகும்.
அதாவது மருத்துவத்துறை, பொருளியல் துறை, தொழில்நுட்பத் துறை, விஞ்ஞானம் போன்ற துறைகளை எல்லாம் தமிழ்மொழி வழியில் மாணவர்கள் பயிலும் போது நம்முடைய மொழியும் மாணவர்களின் சிந்தனைத் திறனும் எம்முடைய மொழியின் அறிவியல் கருத்துக்களும் பன்னெடுங்காலம் வளர்ச்சியுற்று மென்மேலும் பெருகுவதற்கு இக்கலைச் சொற்கள் வழிவகுக்கும்.
மாணவர்களின் சிந்தனை திறனும், ஆற்றலும் வளரும் போது அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பதற்கு உதவும்.
உதாரணமாக ஜப்பானியர்கள் பல்வேறு கலைச் சொற்களை அவர்களது தாய் மொழியில் உருவாக்கிக் கொண்டு, மாணவர்கள் அவர்களது தாய்மொழியிலேயே கல்வி பயில்கின்றனர்.
இதனால்தான் அவர்களுடைய அறிவியலும், தொழில்நுட்பமும் மிக அதிகளவில் உயர்ந்து இன்று உலக அரங்கில் தொழில்நுட்பத்தில் மிகச் சிறந்த நாடாக திகழ்வதற்கு காரணமாக உள்ளது.
Read more: மாதுளை இலையின் பயன்கள்