கணினி என்பது வளர்ந்து வரும் நவீன கருவிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இன்றைய தொழில்நுட்ப காலத்தில் கணினியைப் பயன்படுத்தாத ஒரு துறையே கிடையாது.
அறிவியல் வளர்ச்சியில் மனிதனின் வாழ்வோடு ஒன்றிணைந்து கொண்ட ஒரு பொருள் கணினி எனலாம். கணினியின் பயன்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.
கணினியின் பயன்கள்
மக்களின் அன்றாட வாழ்க்கையில் கணினி முக்கியப் பங்கு வகிக்கிறது.
கணினி மக்களின் வேலைகளைச் சுலபமாக்குகிறது. தொழில்நுட்பம் சம்பந்தமான தகவல்களைப் பெறவும், மக்களின் அறிவை வளர்க்கவும் கணினி முக்கிய பங்காற்றுகிறது. அன்றாட வாழ்க்கையில் மக்கள் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், பரிமாறிக் கொள்ளவும் கணினி பயன்படுகிறது.
சிறந்த பொழுதுபோக்கு கருவியாக பயன்படுகின்றது.
கணினியிலுள்ள அறிவுசார் விளையாட்டுகள் போன்றன வேலை முடிந்து களைப்புடன் வீடு திரும்புவர்களுக்கு புத்துணர்ச்சியை அளித்து மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
தொடர்ந்து சிறுவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை நல்வழியில் செலவிட கணினிகள் துணைபுரிகின்றன.
கல்விக்கு உதவுகின்றது.
ஆங்கிலம், கணிதம், அறிவியல், வானியல், வரலாறு, புவியியல், பொது அறிவு, நடனம், கைவேலைப்பாடு என எந்த ஒன்றையும் கற்றுக்கொள்ள கணினி துணை புரிகின்றது. மாணவர்கள் பள்ளியில் கற்கும் பாடங்கள் தொடர்பான விவரங்களை சேமித்து வைப்பதற்கும் கணினி உதவுகின்றது
தரவுகளைச் சேமித்து வைக்கலாம்.
அதிகளவிலான தரவுகளைச் சேமித்து வைப்பதுடன் உரிய நேரத்தில் அவற்றை மிக விரைவாகவும் எடுத்துக்கொள்ளவும் முடிகின்றது.
இயந்திர பழுதுகளை சரி செய்ய பயன்படுகின்றது.
வீடுகளில் மட்டுமல்லாது தொழிற்சாலையிலும் கணினியின் பங்கு அளப்பரியதாக உள்ளது. தொற்சாலைகளில் இயந்திரங்களைக் கொண்டுதான் அதிக வேலைகளைச் செய்கின்றனர். அந்த இயந்திரங்களைச் சீராக இயக்க கணினியே பயன்படுகின்றது. அவற்றில் ஏற்படும் கோளாறுகளுக்கு கணினியைக் கொண்டுதான் பழுது பார்க்கப்படுகின்றது.
மருத்துவத்துறையில் கணினி பெரும் பங்காற்றுகிறது.
உடலிலுள்ள நோய்களைக் கணினியின் மூலமே ஆராய்ந்து இலகுவாக கண்டுபிடிக்கின்றனர். நோய்களுக்கான காரணங்கள், அதற்கான ஆய்வுகள், மருந்துகள் அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கும் கணினியே பெருமளவில் துணைபுரிகின்றது.
ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்கு கணினி பயன்படுகின்றது.
மின்னஞ்சல், இணையம் போன்றவற்றின் மூலம் உலகின் எந்த மூளையில் இருக்கும் ஒருவரையும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். நம் உறவினர்களோ அல்லது நண்பர்களோ, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கணினியின் மூலம் அவர்கள் முகத்தைப் பார்த்து, நேரடியாக உரையாட முடியும்.
தொழிற் துறையில் கணினி பெருமளவில் பயன்படுகின்றது.
அலுவலகக் கோப்புக்கள், ஊழியர்களின் விவரங்களை சேமித்தல், கடிதங்களைத் தயாரித்தல், ஊழியர்களின் வரவு செலவு, சம்பளம் போன்றவற்றைத் தயாரித்தலிலும் கணினி உதவுகிறது.
கணினிகள் சிறு வணிகங்களில் விற்பனைப் புள்ளியாகவும் (Sales data points), பொதுப் பதிவேடு வைப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. அலுவலகத்தில் தயாரிக்க வேண்டிய அறிக்கைகளைச் செய்யவும் கணினி தேவைப்படுகின்றது.
தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
தகவல்களை இரகசியமாக வைத்துக்கொள்ள கடவுச்சொல் போன்றவற்றை கணினியில் பயன்படுத்தலாம். இதன் மூலம் நமது தகவல்கள் பிறரிடமிருந்து பாதுகாக்கப்படுவதுடன், இரகசியமாகவும் வைத்திருக்க உதவுகின்றது.
போக்குவரத்து செயற்பாடுகளை இலகுபடுத்துகின்றது.
ரயில், பேருந்து, விமானம், போன்ற போக்குவரத்து பயணச் சீட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்து சுலபமாகப் பயணத்தை மேற்கொள்வதற்கு கணினி பயன்படுகின்றது.
அறிக்கைகளைத் தயாரிக்க கணினி பயன்படுன்கிறது.
கைகளால் தயாரிக்கும் அறிக்கைகள் சில சமயம் எழுத்து வடிவங்களாலும், நேர்த்தியின்மையாலும் மனநிறைவை ஏற்படுத்தாது. ஆனால், கணினியால் தயாரிக்கப்படும் அறிக்கைகளை நாம் நமது நிறைவுக்கு ஏற்றவாறு தயாரித்துக் கொள்ளலாம்.
பலவகையான எழுத்து வடிவங்களையும், வண்ணங்களையும் பயன்படுத்தி தெளிவாகவும், அழகாகவும் அறிக்கையைத் தயாரிக்கலாம்.
வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ள உதவுகின்றது.
ஒருவர் தங்களுக்கு ஆர்வம் உள்ள துறையில் வேலைவாய்ப்புகளை கணனியின் துணைகொண்டு பெற முடியும். எங்கு புதிய வேலை வாய்ப்புகள் வெற்றிடமாக உள்ளதோ அதனை அறிந்து அதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கணினி பயன்படுகின்றது.
You May Also Like : |
---|
இணையத்தின் பயன்கள் |
கணினி பற்றிய கட்டுரை |