இந்த பதிவில் உருண்டை திப்பிலி மருத்துவ பயன்கள், திப்பிலியின் தீமைகள் மற்றும் திப்பிலி வகைகள் என்பவற்றை காணலாம்.
திப்பிலிக்கு பலவிதமான மருத்துவ குணங்கள் உள்ளன. சித்த மருத்துவத்தில் திப்பிலியின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
Table of Contents
உருண்டை திப்பிலி மருத்துவ பயன்கள்
சுவாச பிரச்சனைகள்
ஆஸ்துமா, சளி, இருமல், சுவாசிக்க சிரமப்படுதல் போன்ற பல சுவாச பிரச்சனைகளுக்கு திப்பிலி தீர்வாக அமையும்.
வாதம், கபம்
திப்பிலி உடல் உஷ்ணத்தை அதிகமாக்கும் இதனால் பித்தத்தை பலப்படுத்தி வாதம் மற்றும் கபத்தை குறைக்கும்.
இதனாலேயே இதனை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. காரணம் உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை திப்பிலிக்கு உண்டு.
பக்கவாதம்
உடலில் ஒரு பகுதி மட்டும் செயலிழந்து போகும் பக்கவாதத்திற்கு மருந்தாக திப்பிலியை ஆயுர்வேதத்தில் பயன்படுத்துகிறார்கள்.
தொற்று நோய்கள்
உடலில் ஏற்படும் கிருமி தொற்றுக்களை அழிக்கும் தன்மையும் திப்பிலிக்கு உண்டு.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி உடலுக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தியையும் கொடுக்கின்றது. அத்துடன் இளைப்பு, உடல் சோர்வு என்பவற்றை போக்கி உடலை புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கின்றது.
உணவு ஜீரணம்
திப்பிலி, சுக்கு, ஓமம் இவற்றை இடித்து சூரணமாக்கி ஒரு தேக்கரண்டி எடுத்து வெண்ணீரில் கலந்து இளம் சூட்டுடன் குடித்து வந்தால் உணவு எளிதாக ஜீரணமாகிவிடும்.
அத்துடன் வாய்வு தொல்லை பிரச்சனையும் குணமாகும்.
குரல் வளம் சிறக்க
தேனில் திப்பிலியை ஊற வைத்து மென்று சாப்பிட்டால் குரல் வளம் நன்றாவதுடன் பேச்சு மற்றும் தொனி சிறக்கும்.
இரைப்பை மற்றும் ஈரல்
இரைப்பை மற்றும் ஈரலில் பிரச்சனைகள் உள்ளவர்கள் திப்பிலியை இளம் சூட்டில் வறுத்து பின் பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரைப்பை மற்றும் ஈரல் குறைபாடுகள் குணமாகும்.
திப்பிலி தீமைகள்
இந்த திப்பிலி அதிக உஷ்ணத்தை கொண்டது. இதை அதிகளவு எடுத்துக்கொள்ளும் போது உடல் உஷ்ணம் சம்பந்தமான பாதிப்புக்கள் ஏற்படும்.
திப்பிலி வகைகள்
- அரிசி திப்பிலி
- யானைத் திப்பிலி
- சிறு திப்பிலி
- கண்டதிப்பிலி
You May Also Like :